கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா.? ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது!

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டதா.? ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது!



no-more-free-things-in-ratin-shop

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கட்டங்களாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும்ப அடைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

ration card

இந்தநிலையில், ரேஷன் கடைகளில் இனி இலவசப் பொருட்கள் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களை பணம் கொடுத்துத் தான் பெற வேண்டும்.ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் 1,3,4 தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.