தீபாவளி தினத்தன்று தமிழகத்தில் மழை பெய்யுமா? வெயில் அடிக்குமா?no chances to rain for diwali

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருப்பதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. 

இந்தநிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை சற்று குறையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் தமிழக மக்கள் குஷியில் உள்ளனர். தொடர்ந்து இரண்டு வாரங்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்துவருவதால் தீபாவளி பண்டிகை அன்றும் மழை வருமோ என்ற சந்தேகம் இருந்தது.

rain in tamilnadu

இந்தநிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை சற்று குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து மக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர். புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.