#Big Breaking: குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 10 பேரின் சடலம் மீட்பு - மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

#Big Breaking: குன்னூர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 10 பேரின் சடலம் மீட்பு - மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!


Nilgiris Sulur Army Helicaptor Accident Nigiris District Announce 10 Died body Rescued

இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்ஸ்டன் இராணுவ முகாமுக்கு, இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத், பிரக் எல்.எஸ் லிட்டர், ஹர்ஜிந்தர் சிங், குர்சேவாக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சட்பால் ஆகிய 9 பேர் செல்லவிருந்தனர். இவர்கள் வரும் தகவல் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பேரில் சாலை மார்க்கமாக இவர்கள் குன்னூர் வெலிங்ஸ்டன் இராணுவ முகாமுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

இதனையடுத்து, கோவை மாவட்ட காவல் துறையினர் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் துறையினர் சாலை மார்க்கமாக செல்லும் வழிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோவை விமான நிலையத்திற்கு வந்த இராணுவ அதிகாரிகள் அனைவரும், இராணுவ ஹெலிகாப்டர் ஐ.ஏ.எப் எம்.ஐ. 17 வி 5 உதவியுடன் திடீரென ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த நேரத்தில் பனிமூட்டம் சூழ்ந்திருந்த நிலையில், குன்னூரில் தரையிறங்க வாய்ப்புகள் இல்லாததால், மீண்டும் ஹெலிகாப்டர் கோவைக்கு திரும்பி அனுப்பப்பட்டுள்ளது. 

Breaking News

வரும் வழியில், நீலகிரி காட்டேரி மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. காலை 10.30 மணியளவில் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 9 இராணுவ கமாண்டோக்கள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்து நடைபெற்ற பின்னர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட, மீட்பு படை மற்றும் இராணுவத்தினர் விபத்து நடத்த இடத்திற்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தகவல் அறிந்த தமிழக முதல்வர் மீட்பு பணிகளில் விரைந்து செயல்பட உத்தரவிட்டு, இன்று மாலை கோவை வழியாக குன்னூருக்கு செல்லவுள்ளார். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இராணுவ தலைமை அதிகாரிகளும் தமிழகத்திற்கு வந்துகொண்டு இருக்கின்றனர். பிரதமர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இரவு வேளையில் தமிழகம் வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

Breaking News

தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவும் குன்னூருக்கு வந்துகொண்டு இருக்கிறார். தற்போது வரை பிபின் ராவத் மனைவி உட்பட 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பலரும் 80 % தீ காயத்துடன் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தகவல் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. 

இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேரின் சடலம் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். ஆனால், இறந்தவர்கள் யார்? யார்? என்பதை தெரிவிக்கவில்லை. 10 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.