
ஒரே நேரத்தில் 2 கரடிகள், 2 சிறுத்தை ஊருக்குள் புகுந்து உணவு தேடியதால் மக்கள் அச்சம்.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கரிமறா அட்டி கிராமத்தை சுற்றிலும் வள்ளுவர் நகர், வாசுகி நகர், பெரியார் நகர், வசம்பள்ளம் ஆகிய பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றிலும் தேயிலை தோட்டம் நிறைந்து காணப்படுகிறது.
இதனால் வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்து, இரவு வேளைகளில் குடியிருப்புகளில் உணவுகளை தேடி அலைந்து வருகிறது. மேலும், கடந்த சில மாதமாக சிறுத்தைகள் மற்றும் கரடிகள் நடமாட்டமும் காணப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் ஊருக்குள் வரும் சிறுத்தை வீட்டில் இருக்கும் நாய், வீட்டு விலங்கு போன்றவற்றை அடித்து கொன்று சாப்பிடுகிறது. மக்கள் சுதாரித்து எழுந்து விரட்ட தொடங்கினால், வேட்டையாட்டிய உணவை அப்படியே விட்டுவிட்டு தப்பி செல்கிறது.
இதனைப்போல கரடிகளும் வீடுகள் மற்றும் கோவிலில் உள்ள எண்ணெய், மரத்தில் உள்ள தேன் போன்றவற்றை குடிக்க வருகின்றன. சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்று 2 சிறுத்தைகள் மற்றும் 3 கரடிகள் ஒரே நேரத்தில் கரிமறா அட்டி கிராமத்தில் நுழைந்தது.
Advertisement
Advertisement