தமிழகம்

திருமண வாழ்க்கையை பல கனவுகளோடு தொடங்கிய கணவன்! திருமணமான மறுநாளே கண்ட அதிர்ச்சி காட்சி!

Summary:

newly married women died

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அழகாபுரி நகரைச் சேர்ந்த  தச்சு வேலை செய்து வரும் செல்வக்குமார் என்பவருக்கும், விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் சுவேதா என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு  மானாமதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமண வாழ்க்கையை இருவரும் தொடங்கிய நிலையில் புதிதாக கட்டிய வீட்டில் புதுமண தம்பதிகள் குடியேறினர். இந்தநிலையில் புதுப்பெண் அவரது கணவரிடம் அருகில் உள்ள பழைய வீட்டில் உள்ள தனது செல்போனை எடுத்து வரும்படி கூறினார். இதையடுத்து போனை எடுத்து வருவதற்காக செல்வக்குமார் சென்றுள்ளார். அப்போது சுவேதா புதுவீட்டின் கதவை அடைத்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் கதவை திறக்கும்படி சத்தம்போட்டுள்ளார்.

சுவேதா நீண்ட நேரம் கதவை திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வக்குமார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வீட்டின் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சுவேதா. இதனையடுத்து உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது, ஏற்கனவே சுவேதா இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 2-வது நாளில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement