திருமணம் முடிந்த சில நாட்களில் கணவன் போட்ட உத்தரவு! விபரீத முடிவு எடுத்த மனைவி!

திருமணம் முடிந்த சில நாட்களில் கணவன் போட்ட உத்தரவு! விபரீத முடிவு எடுத்த மனைவி!


newly married women commited suicide


சென்னையில் திருமணம் முடிந்த 6 மாதத்தில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக விக்னேஷ்வரி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்த சில நாட்களிலே, உறவினர்களுடன் பேச கூடாது என்று மனைவிக்கு உத்தரவு போட்டுள்ளார் மாரியப்பன்.

மேலும், மாரியப்பன்  பண்டிகை காலங்களில் பணம் நகை கேட்டு மனைவிக்கு  தொடர் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த விக்னேஷ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.suicide

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விக்னேஷ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன் விக்னேஷ்வரி எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி மாரியப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.