அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
திருமணமான 15 நாட்களில் மனைவிக்கு குழந்தை பிறந்தது!. அதிர்ச்சியில் நொந்துபோன கணவன்!.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த அஜீஸ் என்பவருக்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேரந்த பர்வீன் பானு என்பவருக்கும் 15-நாட்களுக்கு முன் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
அதன் பின் கணவரின் ஊருக்கு வந்த பர்வீன் பானு, கடும் வயிற்று வலி இருப்பதாகக் கூறி, கணவருடன் சரிவர பேசாமலும் பழகாமலும் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பர்வீன்பானுவுக்கு திடீரென வயிற்றுவலி அதிகமானதால், அவரின் கணவர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என கூறியுள்ளனர்.
திருமணம் ஆகி 15 நாட்கள் கூட முடியவில்லை, அதற்குள் எப்படி குழந்தை என்று கணவன் விரக்தியுடன் மருத்துவமனையை விட்டு சென்றுள்ளார். இதனிடையே அதிகாலையில் பர்வீன்பானுவுக்கு ஆண்குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதை மறைத்த பர்வீன்பானு மற்றும் அவரது பெற்றோர் மீது புகாரளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.