பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
இருவரும் ஒரே சமூகம்... கட்டிய தாலியின் ஈரம் கூட காயல... அதுக்குள்ள இப்படியா..!
தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் தம்பதிகளான கார்த்திகா - மாரிசெல்வம் இருவரையும் திருமணமான 3 நாட்களில் வீடு புகுந்து சரமாரி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாரிச்செல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் மாரிச்செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் பெற்றோர் இந்த திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் திடீரென ஐந்து பேர் மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய இருவரையும் வெட்டிக் கொலை செய்ததாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய உறவினர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.