ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
நியூ இயர் செலிபிரேசனுக்கு நண்பர்களை நம்பி பயணம் போறீங்களா?.. கொஞ்சம் இதை தெரிஞ்சிக்கோங்க..!
புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளன. என்னதான் ஆண்டுகள் கடந்து தொழில்நுட்பங்கள் அறிமுகம் ஏற்பட்டாலும், ஒருசில விஷயங்களில் மாற்றங்கள் என்பது இல்லை.
கேடான விஷயங்களில் அப்டேட்டாகும் இளசுகள், தங்களின் வாழ்நாட்களை தொலைத்துவிடும் துயரங்கள் இன்றளவில் அதிகரித்து இருக்கின்றன. அதனை விழிப்புணர்வாக ஏற்படுத்தும் பொருட்டு, முகநூலில் ஒருவர் பெருநகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் நடக்கும் கொடுமையால் நடந்த சம்பவத்தை முகநூலில் பதிவிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
அந்த பதிவுகளை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் நமது விருப்பம் எனினும், கெட்டுப்போய் கிடைக்கும் இந்த காலத்தில் நாம் அதனை கவனிக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இது அனைவர்க்கும் நடக்காது எனினும், எங்கோ ஒரு நபருக்கு ஏற்படும் இழப்புக்கு, தனிமனித ஒழுக்கமின்மையே முதல் காரணம் ஆகும்.
அந்த முகநூல் பதிவில், "முதல் ‘குடி’ - முதல் ‘செக்ஸ்’ (பெயர், ஊர் மாற்றப்பட்டுள்ளது). சிறுமி ஒருவர் ப்ளஸ் ஒன் படித்தாள். ஆண்,பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் உயர்ந்த அந்தஸ்து கொண்ட பள்ளி. யாரும் யாருடனும் நட்பாகப் பழகலாம். அவள் வெளி மாநிலம் ஒன்றில் இருந்து வந்து சென்னை ஹாஸ்டலில் தங்கி படித்தாள். பையன்கள் தனி வீடுகள் எடுத்தும், ஹாஸ்டலிலும் தங்கியும் படித்தனர். சனி ஞாயிறு என்றால் அவரின் தோழிகளும், ஆண் மாணவர்களும் புதுச்சேரி வரை பைக்கில் போய் ஜாலியாக இருந்து விட்டு, ஆடிப்பாடி மாலையில் வருவார்கள்.
மகாபலிபுரமும் போவார்கள். பையன்கள் பீர் சாப்பிடுவார்கள். சில மாணவிகள் ஒயின் சாப்பிடுவார்கள். ஆனால், அவள் கூச்சம் நிறைந்த அழகான பெண். ஒதுங்கியே இருப்பாள். தோழிகள் அவளை பிடித்து இழுத்து ஆட வைப்பார்கள். மாணவர்களுக்கு மேரி மீதும் அவளின் அபார அழகின் மீதும் தனி கிரக்கம் உண்டு. ஆனால், வெளியே காட்டிக் கொள்வதில்லை. நாளை புத்தாண்டு பிறக்கப்போகிறது. புதுச்சேரி போகலாம் என்று பிளான் போட்டார்கள். அவளையும் தோழிகள் கட்டாயமாக அழைத்தார்கள். டிசம்பர் முப்பத்தி ஒன்று மாலையில் அனைவரும் கிளம்பினார்கள். பைக்கில் தான் பயணம். போகும் போதே ஒரு காஸ்ட்லி லாட்ஜை புக் செய்தார்கள். இரவு அந்த ஹோட்டலே களை கட்டியது.
ஒரே ஆட்டம் கூச்சல் கொண்டாட்டம். மாணவர்கள் டின் பீர் குடிக்க, தோழிகளும் குடித்தார்கள். மேரியையும் கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்கள். அங்கு கூடி இருந்த சின்ன சின்ன பள்ளி மாணவிகள் கூட அன்று தான் முதன்முதலில் குடிக்க பழகினார்கள்...!! போதை தலைக்கு ஏற மயங்கிய படி, கட்டிப்பிடித்து ஆபாசமாக ஆடினார்கள். ஒரே கலாட்டா. அவளுக்கு கால்கள் தரையில் நிற்க வில்லை. நிலை தடுமாறினாள். மாணவர்கள் அவளை கைத்தாங்கலாக மாடிக்கு கூட்டிப் போனார்கள். படுக்க வைத்தார்கள். மறுநாள் மதியம் தான் அவளுக்கு விழிப்பு வந்தது. உடம்பு அடித்துப் போட்டது போல வலி. கை கால்களை அசைக்க முடிய வில்லை. எனக்கு என்ன நடந்தது என்றாள். தோழிகள் ஒன்றுமில்லை, எங்களுக்கும் தெரியாது என்றார்கள்.
வலிக்கக் கூடாத இடத்தில ரணமாக வலித்தது. மார்பில் ரத்தம் கட்டி இருந்தது. அவளுக்கு புரிந்து போயிற்று.. தன்னை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று. அழுதாள். கதறினாள். சமாதானம் செய்து அழைத்துப்போனார்கள் தோழிகள். அவளுக்கு இரண்டே மாதத்தில் வயிற்றில் குழந்தை. பள்ளிக்கு தெரிந்து விரட்டினார்கள். அப்பா அம்மா அலறியபடி ஓடிவந்தார்கள். ஸ்தம்பித்து நின்றாள் அவள். ஊருக்குப் போனாள். கடிதம் எழுதினாள். தோழிகள், நண்பர்கள் பற்றி எழுதினாள். தூக்கில் தொங்கி விட்டாள். அதன் பின் துரோகம் செய்த மாணவர்களை போலீஸ் அள்ளிச்சென்றது..!
ஆனால் அவள் எழுதிய கடிதத்தில் எழுதிய ஒரு வாசகம் இங்கு முக்கியம்.
நகரங்களில் உள்ள பல மாணவிகளுக்கு முதல் குடிக்கும் அனுபவமும், பலவந்தமான செக்ஸ் அனுபவமும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தான் அதிகம் நடக்கிறது. என்னைப் போன்ற மாணவிகளே..!! தோழிகள், நண்பர்களை நம்பி பார்ட்டிகளுக்கு போகாதீர்கள். ஒரு அவள் போதும்..! என்ன சொல்வது நாளை புத்தாண்டு வருகிறது. பெற்றோர்களே..! மாணவ, மாணவிகளே உஷாராக இருங்கள். புதுவருடத்தை எச்சரிக்கையோடு எதிர்கொள்ளுங்கள் .எதிர் காலத்தை வீணாக்கி விடாதீர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.