தமிழகத்திற்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பிரதமர் மோடி! நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் இந்தியா மருத்துவம்

தமிழகத்திற்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த பிரதமர் மோடி! நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்!

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகத்தில்  புதிதாக  6 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தியாவில் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் துவங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஒவ்வொரு மருத்துவக்கல்லூரியும் ரூ.325 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இதில், மத்திய அரசு சார்பில் 195 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 130 கோடி ரூபாயும் அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo