உருவானது புதிய ஃபனி புயல்; தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை.!

உருவானது புதிய ஃபனி புயல்; தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை.!


new-cyclone--fani-cyclone---bay-of-bengal---indian-osea

தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து சுட்டெரிக்கும் வெயில் ஆனது மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்கள் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியப் பெருங்கடல்-வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் அடுத்த 36 மணி நேரத்தில் அது புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழகத்தில் 30 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

vanilai

அவ்வாறு கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது உருவாகியுள்ள புதிய புயலுக்கு  ஃபனி புயல் (Fani Cyclone) என்று பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக கிடைத்த தகவலின்படி உருவாகியுள்ள புதிய புயலின் காரணமாக கன்னியாகுமரியில் கடல் சீற்றம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.