தமிழகம் Covid-19

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா.! சற்றுமுன் வெளியான தகவல்.!

Summary:

தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. 

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒருவருக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் கூறுகையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரிட்டனில் இருந்து வந்த 30 பேரின் சோதனை மாதிரிகளை  ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என தெரிவித்தார்.


Advertisement