திருமணமாகாத பெண் காவலரின் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? - பரபரப்பு புகார்.!New complaint Against Savukku Shankar 

 

தனியார் யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான விவாதங்களில் கலந்துகொண்டு சர்ச்சை தகவலை தெரிவித்து வலம்வந்த யூடியூபர் சவுக்கு சங்கர், பின்னாளில் தனியாக யூடியூப் சேனலையும் தொடங்கி நடத்தி வந்தார். 

சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போன யூடியூபர்

இதனிடையே, அரசியல் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிவந்த சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரி ஒருவர் குறித்தும், பெண் அதிகாரிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: "கோவையில் சிறையில் என்னை கொல்லப்போறாங்க" - செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் அதிர்ச்சி தகவல்.!

அடுத்தடுத்து பல புகார்கள்

தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கஞ்சா வைத்திருந்ததாகவும் புகார் பதிவு செய்யப்பட்டு, குண்டரும் பாய்ச்சப்பட்டுள்ளது. அவரை அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவதாக சங்கர் தரப்பு கூறி வருகிறது. 

போன் நம்பர் கேட்ட சவுக்கு?

தன்னை கோவை சிறையில் வைத்து கொலை செய்யப்போகிறார்கள் எனவும் சங்கர் கூறி வருகிறார். இந்நிலையில், பெண் காவலர்கள் மத்தியில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர், திருமணமாகாத பெண் காவலரிடம் செல்போன் நம்பர் கேட்டதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் பயணித்த வேன் விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காணொளி வைரல்.!