கட்டின தாலியில் ஈரம் கூட காயல.. பாவிங்க அதுக்குள்ள இப்படி செஞ்சுட்டாங்க.. புது மாப்பிள்ளை வெட்டி படுகொலை..New bride murdered after three months of marriage near Madurai

திருமணம் முடிந்த மூன்றே மாதத்தில் புது மாப்பிளை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளே பேப்பனையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருக்கும், இவரது உறவுக்கார பெண் பவானி என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் புதுமாப்பிள்ளை வெள்ளைச்சாமி சமீபத்தில் பூதமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரது வண்டியை வழிமறித்த சில மர்ம நபர்கள் வெள்ளைச்சாமியை அதே இடத்தில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வெள்ளைச்சாமி சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து விசாரித்துவருகின்றனர். இந்நிலையில் வெள்ளைச்சாமியின் திருமணத்தின் போது கடும் தகராறு ஏற்பட்டதாகவும், பல்வேறு தகராறுக்கு மத்தியில் அவருக்கு திருமணம் நடந்ததும் தெரியவந்துள்ளது.

இதனால் திருமணத்தின் போது ஏற்பட்ட தகராரே வெள்ளைச்சாமி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் புதுமாப்பிள்ளை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.