"அன்னபூர்ணா ஓனர்கிட்ட கேக்கனும்" வைரலாகும் பதிவு.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அன்னபூர்ணா நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசனும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உரையாடியது மிகப்பெரிய அளவில் வைரலானது. ஜி.எஸ்.டி குறித்து சீனிவாசன் பேசிய தகவல் எதிர்கட்சிகளிடையே வரவேற்பை பெற்றது.
இதனால் ஒருகட்டத்தில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்படவே, மறுபுறம் மத்திய ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு பதில்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்??? 1 கப்பு மாவு ஊத்தி, 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1 செட் 40 ரூபாய்.. அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55 ரூபாய்..
இதையும் படிங்க: கல்லூரி மாணவியை மதுகுடிக்க அழைத்த போதை பேராசிரியர்கள்; நெல்லையில் பரபரப்பு..!
அதே 1கப் மாவுல நீளமா ஊத்தி தோசைன்னா 110 ரூபாய், அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு 95 ஓவாய் ரூபாய், அதே தோசை மேல இட்டிலிக்கு தர்ர பொடிய தூவுண பொடி தோசைன்ணு 125 ஓவாய் வாங்குறாறு.. அதே 1 கப்பு மாவு,அதே மாஸ்ட்டர், அதே gas.. ஒண்ணுமே புரியல கோவிந்தா" என அந்த பதிவு வைரலாகி வருகிறது.
இந்த அன்னபூர்ணா ஓனர்கிட்டா கேக்கனும்???
— P.M (@tirunelveli_bjp) September 13, 2024
1 கப்பு மாவு ஊத்தி 1 கப்பு சாம்பார் குடுத்து இட்டிலின்னா 1செட் 40ஓவாய் 😃
அதே இட்டிலிக்கு கிண்ணத்துல சாம்பார் ஊத்தி சாம்பார் இட்லின்னா 55ஓவாய்🥹
அதே 1கப் மாவுல நீளம ஊத்தி தோசைன்னா 110 ஓவாய்😁
அதையவே குட்டையா ஊத்தோன ஊத்தாப்பம்னு 95… pic.twitter.com/C5ZYBlg7DU
இதையும் படிங்க: திருத்தணி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர்; நொறுக்கியெடுத்த பொதுமக்கள்..!