நெல்லையில் பரபரப்பு.. பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை.!

நெல்லையில் பரபரப்பு.. பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை.!


Nellai BJP Admin killed

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை அருகே மூளிக்குளத்தில் வசித்து வந்தவர் ஜெகன். இவர் நெல்லை மாவட்ட பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார்.

nellai

இந்த நிலையில் நேற்று இரவு மூளிக்குளம் கடைத்தெருவில் தனது நண்பர்களுடன் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்பி சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த ஜெகனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

nellai

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஜெகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.