ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
நீட் தேர்வு விவகாரம்.. மேலும் ஒரு மாணவி தற்கொலை.. ராசிபுரம் அருகே பரபரப்பு.!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் ஆயிபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் சலவை தொழிலாளியான பழனிச்சாமி - சாவித்திரி தம்பதியினர். இவர்களுக்கு ஞானப்பிரியா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ஞானப்பிரியா அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த ஞானப்பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து வேலை முடிந்த வீட்டுக்கு வந்த பெற்றோர் மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர்.
பின்னர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஞான பிரியா தனது பள்ளியில் நடைபெறும் நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க உள்ளதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். மேலும் வகுப்பில் படிக்கும் பாடத்திற்க்கும் நீட் தேர்விற்கான பாடத்திட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் தனக்கு எதுவுமே புரியவில்லை என்றும் தனது பெற்றோரிடம் கூறி ஞானபிரியா புலம்பியுள்ளார்.
இதனால் மன வேதனை அடைந்த ஞானபிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.