ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
அடேங்கப்பா! மகனுக்காக உருவாக்கிய கெமிக்கல் இல்லாத இயற்க்கை நீச்சல் குளம்!ஆண்டுக்கு ரூ.3 கோடி ஆண்டு வருமானம்! அது எப்படி? வைரல் வீடியோ...
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதுமையான முயற்சிகளே எதிர்காலத்திற்கான நிலையான தீர்வுகளை வழங்குகின்றன. அதற்கு உதாரணமாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த சார்டடர்ட் அக்கவுண்டன்ட் விகாஷ் குமார் உருவாக்கிய இயற்கை நீச்சல் குளம் சமூகத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
குளோரின் நீருக்கு மாற்றாக இயற்கை குளம்
வழக்கமான நீச்சல் குளங்களில் பயன்படுத்தப்படும் குளோரின் நீர் கண்களுக்கு எரிச்சல், முடி உதிர்வு, மூச்சுக்குழாய் பிரச்சனை போன்ற சிக்கல்களை உருவாக்குகிறது. இதை தவிர்க்க விரும்பிய விகாஷ், தனது பண்ணை வீட்டில் மண், கற்கள், தாவரங்கள், இயற்கை பாக்டீரியாக்கள் போன்றவற்றைக் கொண்டு கெமிக்கல் இல்லா நீச்சல் குளத்தை அமைத்தார். இதில் சிமெண்ட் அல்லது பிளாஸ்டிக் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. நீர் சுத்திகரிப்பு குறைந்த சக்தி கொண்ட பம்ப் மூலம் இயற்கையாகவே நடைபெறுகிறது.
பயோஸ்பியர் நிறுவனம்
தன் மகனுக்காக தொடங்கிய முயற்சி வணிகமாக மாறிய நிலையில், விகாஷ் "Biosphere" என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஐரோப்பாவில் பிரபலமான பயோ ஸ்விம் பாண்ட் முறையை இந்திய சூழலுக்கேற்ப மாற்றியமைத்து, பண்ணை வீடுகள், ரிசார்ட்டுகள், தனியார் வீடுகள் ஆகிய இடங்களுக்கு இயற்கை நீச்சல் குளங்களை வடிவமைத்து வழங்க ஆரம்பித்தார். ஒவ்வொரு குளமும் சுமார் 45 நாட்களில் முடிக்கப்படுகிறது. மேலும் சிறிய ஓடைகள், நீர்வீழ்ச்சி போன்ற கூடுதல் வசதிகளும் சேர்க்கப்படுகின்றன. பராமரிப்பு செலவும் குறைவாக உள்ளது.
இதையும் படிங்க: நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!
வருமானமும் சுற்றுச்சூழல் பலன்களும்
இந்த முயற்சி மூலம் விகாஷ் குமாரின் Biosphere நிறுவனம் தற்போது ஆண்டு ரூ.3 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறது. உலகளவில் பயோ நீச்சல் குளங்களுக்கான சந்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 4 பில்லியன் டாலர் ஆகும் என்ற கணிப்பும் இவருக்கு ஊக்கமளித்துள்ளது. முக்கியமாக, நீரை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால் நீர் வீணாகாமல் தடுக்கப்படுகிறது.
விகாஷ் குமார் உருவாக்கிய இந்த புதுமை, ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் சிறந்த உதாரணமாக திகழ்கிறது. நீரை சிக்கனமாகவும், இயற்கையை காப்பதற்கும் உதவும் இந்த முயற்சி, இந்தியாவின் எதிர்கால தண்ணீர் மேலாண்மைக்கு புதிய பாதையை காட்டுகிறது.
இதையும் படிங்க: என்ன ஒரு திறமை! மாணவர்கள் ஒன்று கூடி உருவாக்கிய இசை! அதுவும் எப்படினு பாருங்க... வைரலாகும் வீடியோ காட்சி....