இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தால் நம்மாழ்வார் விருது, ரூ.5 இலட்சம் பரிசு - அமைச்சர் அறிவிப்பு.!
2023 -24 பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்தை பாதுகாக்க தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், 2023 - 24ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். அவர் பேசியவை பின்வருமாறு,
இயற்கை உரங்களை தயாரிக்க 100 குழுவுக்கு ரூ.1 இலட்சம் வீதம் வழங்குவதற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மைக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாற்று பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறந்த இயற்கை வேளாண் விவசாயிக்கு தமிழக அரசு சார்பில் நம்மாழ்வார் விருதும், ரூ. 5 இலட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும்.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் தகுந்த வேளாண் நிலங்கள் கண்டறியப்பட்டு, வேளாண்மையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.