ஆசிரியை கண்டித்ததால் விபரீதம்: இரயில் முன்பாய்ந்து மாணவர் தற்கொலை.. நாமக்கல்லில் பேரதிர்ச்சி.!

ஆசிரியை கண்டித்ததால் விபரீதம்: இரயில் முன்பாய்ந்து மாணவர் தற்கொலை.. நாமக்கல்லில் பேரதிர்ச்சி.!


Namakkal School Student Suicide Jump infornt of Train

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் கட்டுமான தொழிலாளி பழனிச்சாமி. இவரின் மகன் ரிதுன். இவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிலையில், அவரை ஆசிரியை கண்டித்து வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனத்துடந்துபோன ரிதுன், பள்ளிக்கு அருகே உள்ள தண்டவாளத்திற்கு சென்று இரயில் வரும் நேரத்தில் அதன்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

namakkal

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஈரோடு இரயில்வே காவல் துறையினர், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவனின் தற்கொலை விவகாரத்தால் கொதித்தெழுந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.