BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஸ்கூலை கட்டடித்து, குவாரிக்கு சென்ற மாணவர்.. அரங்கேறிய சோகம்.!
கல்குவாரியில் நீச்சல் பழக்கச்சென்ற மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், அறியாகவுண்டம்பட்டி பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சுராஜ் (வயது 16). இவர் நாமகிரிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில், சுராஜ் இன்று பள்ளிக்கு செல்லாமல், தனது நண்பர்களுடன் ஈச்சம்பாறை கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். சுராஜ் குளித்துக்கொண்டு இருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றிருக்கிறார்.

நீச்சல் தெரியாத சுராஜ் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சுராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.