பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிசாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு; மக்களே அலட்சியம் வேண்டாம்.!

பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிசாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு; மக்களே அலட்சியம் வேண்டாம்.!



Namakkal Rasipuram School Students health issue After Eating Expired Chocolate 

 

குழந்தைகளை உள்ளூர் மாளிகைக்கடையின் தரமற்ற பொருள் விநியோகம் தொடர்பாக அறியாமல் அலட்சியமாக கடைகளுக்கு அனுப்பும் ஒவ்வொருவருக்கும் இந்த செய்தி எச்சரிக்கை பாடம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், தொப்பம்பட்டி அரசுப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களில் சிலர், தங்களது ஆசிரியரிடம் ஆசிரியர் தின கொண்டாட்டத்திற்காக மிட்டாய் கேட்டு இருக்கின்றனர். 

ஆசிரியரும் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து மிட்டாய் வாங்கி சாப்பிட அறிவுறுத்தி இருக்கிறார். இதனையடுத்து, மிட்டாய் வாங்கி சாப்பிட்ட 6 மாணவர்கள் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர். 

குழந்தைகளை மீட்ட பெற்றோர்கள், மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். முதற்கட்ட விசாரணையில் காலாவதியான மிட்டாய் சாப்பிட்டதால் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தெருக்களில் உள்ள கடைகளில் குழந்தைகளை தனியே மிட்டாய் வாங்க அனுப்புவது எவ்வுளவு ஆபத்தானது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.