கள்ளக்காதல் அம்பலமானதால் பரிதாபம் : அவமானத்தால் 20 வயது கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!

கள்ளக்காதல் அம்பலமானதால் பரிதாபம் : அவமானத்தால் 20 வயது கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!


Namakkal Kollimalai College Student Suicide due to Affair

திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்த கல்லூரி மாணவர், தகாத செயல் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, அருவங்காடு கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். இவரின் மனைவி புஷ்பா. தம்பதியின் மகன் வல்லரசு (வயது 20). இவர் பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதல் ஆண்டு படித்து வருகிறார். 

செல்வம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இறந்துவிட்ட நிலையில், குடும்ப சூழலால் புஷ்பா கேரளாவில் உள்ள எஸ்டேட்டுக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். கல்லூரியில் படித்து வந்த வல்லரசு விடுதியில் தங்கியிருந்து பயின்று வருகிறார். அவ்வப்போது வல்லரசு மட்டும் சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார். 

அப்போது, அவருக்கு அதே ஊரில் வசித்து வரும் திருமணமான பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும், வல்லரசுவையும் எச்சரித்து இருக்கிறார்.

namakkal

இதனால் மன உளைச்சலடைந்த வல்லரசு, தனது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்துவிட்டதே என எண்ணி வீட்டில் டூகிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியதால், அக்கம் பக்கத்தினர் சந்தேகித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த செங்கரை காவல் துறையினர், வல்லரசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.