பாய் வியாபாரியிடம் போதையில் மல்லுக்கட்டிய குட்டிச்சாத்தான் புள்ளிங்கோஸ்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

பாய் வியாபாரியிடம் போதையில் மல்லுக்கட்டிய குட்டிச்சாத்தான் புள்ளிங்கோஸ்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!


nagai-drunken-boy-fight-with-thiruvarur-men

பாய் வியாபாரம் செய்த இளைஞரை, போதை ஆசாமி ஒருவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் விஸ்வநாதன். இவர் ஊர் ஊராகச் சென்று பாய் விற்பனை செய்யும் வேலை செய்துவரும் நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் கிராமத்தில் பாய் விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது விஸ்வநாதனை வழிமறித்த மோகன் என்ற போதை ஆசாமி, 400 ரூபாய்க்கு விற்கப்படும் பாயை, 200 ரூபாய்க்கு தருமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு விஸ்வநாதன் மறுப்பு தெரிவித்த நிலையில், மோகன் அவரை தாக்கி அவரது பைக் மற்றும் பாயை சேதப்படுத்தியுள்ளார்.

thiruvarur

அப்போது விஸ்வநாதன் காயமடைந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் மோகனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.