தமிழகம்

வேளைக்கு சென்று வீடு திரும்பாத மகன்.! ஒரு வாரத்திற்கு பிறகு பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

Summary:

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் வேளைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில

சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த வினோத் என்ற இளைஞர் வேளைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. ஒரு வாரமாக வினோத் வீட்டிற்கு வராததால் வினோத்தின் பெற்றோர் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக மேடவாக்கம் காந்திபுரத்தை சேர்ந்த ஈஸ்வர் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வினோத்தை ஒரு வாரத்திற்கு முன் மேடவாக்கம் பகுதியில் உள்ள வடக்குபட்டு ஏரிக்கரை பகுதியில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்த்தபோது அங்குள்ள முட்புதரில் அழுகிய நிலையில் வினோத் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து வினோத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேடவாக்கம் வடக்குபட்டு ஏரிக்கரை பகுதியில் டாஸ்மாக் ஒன்று இயங்கி வருகிறது. இதனால் வடக்குபட்டு ஏரிக்கரை பகுதியில் எப்போதுமே பலர் வெளிப்பகுதியில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் நடந்த கொலை சம்பவமும் குடி போதையில் நடந்தாக கூறப்படுகிறது.


Advertisement