தமிழகம் காதல் – உறவுகள்

இறந்து கிடந்த கணவனின் முன், சிரித்து மகிழ்ந்த மனைவி.! விசாரணையில் வெளிவந்த அதிரவைக்கும் உண்மைகள்.!

Summary:

mother laugh front of husband dead body

ஆந்திரா, பிரகாசம் மாவட்டம் நகுலவரம் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது மனைவி ரஜினி. அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததால், அவர் வெங்கட நாராயணா என்ற மருத்துவரிடம்  சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவ்வாறு அடிக்கடி அங்கு சென்று வந்ததால் டாக்டர் வெங்கட நாராயணாவுக்கும், ஜெகன் மோகனின் மனைவி ரஜினிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து  உல்லாசமாக இருந்துள்ளனர். இது ஜெகன்மோகன் ரெட்டிக்கு தெரியவந்த நிலையில் அவர்  ரஜினியையும், மருத்துவரையும் கண்டித்துள்ளார்.

       à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

இந்நிலையில் அவர்கள் தங்களது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியை கொலை செய்ய திட்டமிட்டு, அத்மகூர் வனப்பகுதியில் கூலிப்படையினரின் உதவியுடன் கொலை செய்துள்ளார். 

பின்னர் ரஜினி காவல் நிலையத்தில் தனது கணவனை காணவில்லை எனவும் புகார் அளித்துள்ளார். பின்னர் தீவிர விசாரணையில் மேற்கொண்ட போலீசார்  கொலை செய்யப்பட்ட ஜெகன்மோகனின் உடலை கைப்பற்றி அதுகுறித்து  ரஜினிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ரஜினி, இறந்து கிடந்த தனது கணவரின் உடலை பார்த்து அழாமல் அருகில் உள்ளவர்களிடம் சிரித்து பேசி கொண்டுள்ளார் .

    à®¤à¯Šà®Ÿà®°à¯à®ªà¯à®Ÿà¯ˆà®¯ படம்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த  போலீசார் அவர் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் டாக்டருடன் ஏற்பட்ட கள்ளகாதலாலே ரஜினி மருத்துவருடன்  இணைந்து தன் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


Advertisement