தமிழகம்

புருஷன் கூட சண்டை!! அதுக்காக இப்படியா பண்றது?? பெத்த பிள்ளையை கொன்று தற்கொலை முயற்சி செய்த தாய்.. பதறவைக்கும் சம்பவம்..

Summary:

குடும்ப தகராறில் பெத்த பிள்ளைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி செய்

குடும்ப தகராறில் பெத்த பிள்ளைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாயும் தற்கொலை முயற்சி செய்த செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் இசக்கிராஜா. இவரது மனைவி செல்வி(வயது 24). இந்த தம்பதியினருக்கு ரித்தீஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்துவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையிலும் வழக்கம் போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் இசக்கிராஜா தான் பணிபுரியும் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் குழந்தையுடன் வீட்டில் இருந்த செல்வி குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இந்நிலையில் செல்வி வீட்டிற்கு தினமும் பால் ஊற்ற வரும் பால்காரர் வீட்டிற்கு வந்தபோது குழந்தையும், செல்வியும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். உடனே பால்காரர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து, இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது செல்விக்கு சிகிச்சை நடைபெற்றுவருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் செல்வி மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

குடும்ப சண்டை காரணமாக பெத்த தாய்யே குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement