தனது 3 மாத குழந்தையை அண்டாநீரில் மூழ்கடித்து கொன்ற தாய்! வெளியான மனதை நொறுக்கும் அதிர்ச்சி காரணம்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம்

தனது 3 மாத குழந்தையை அண்டாநீரில் மூழ்கடித்து கொன்ற தாய்! வெளியான மனதை நொறுக்கும் அதிர்ச்சி காரணம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில்பாளையம் என்ற பகுதியில் வசித்துவந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனநிலையில் 9 வயதில் நிதர்சனாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சங்கீதா மீண்டும் இரண்டாவதாக கர்ப்பமாகியுள்ளார்.

இந்த நிலையில் அந்த தம்பதியினர் தங்களுக்கு ஆண்குழந்தை பிறக்கவேண்டுமென பெருமளவில் எதிர்பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தம்பதியினருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அழகான பெண்குழந்தையே பிறந்துள்ளது.


இதனால் சங்கீதா மிகுந்த மனவுளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் வீட்டில் யாரும் இல்லாதபோது, பிறந்து மூன்று மாதங்களே ஆன தனது பெண் குழந்தையை வீட்டிலுள்ள அண்டா தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் சடலத்தையும் மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலிசார்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo