தமிழகம்

நிறைமாத கர்ப்பிணி மருமகளை உயிரோடு எரித்த கொடூர மாமியார்! வெளியான பதறவைக்கும் சம்பவம்!

Summary:

Mother in law butst pregnant daughter-in-law

தஞ்சாவூர் அடுத்த பொட்டுவாச்சாவடி என்ற பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது இளைய மகள் சங்கீதா. இவருக்கு கடந்த ஆண்டு முருகானந்தம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே சங்கீதாவின் மாமியார் புஷ்பவள்ளி மற்றும் அவர்களது குடும்பத்தினர்: வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்த துவங்கியுள்ளனர்.

மேலும் நாள்தோறும் அவரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். ஆனால் அதனை கணவர் முருகானந்தம் கண்டுகொள்ளவில்லை.  இந்நிலையில் இதுகுறித்து சங்கீதா தனது குடும்பத்தாரிடம் கூட சொல்லாமல் பொறுமையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமியார் புஷ்பவள்ளி நீயும் உன் வாரிசும் உயிரோடு இருக்கக்கூடாது எனக்கூறி நிறைமாத கர்ப்பிணியான சங்கீதாவின் வயிற்றில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அலறி துடித்த சங்கீதாவை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சங்கீதாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

மேலும் குழந்தைக்கும் தாய்க்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில சங்கீதா எனக்கு ஏதேனும் நேர்ந்தால் தனது குழந்தையை பெற்றோர்களிடம் கொடுக்கவேண்டும் கணவரிடமும் மாமியாரிடமும் கொடுக்க வேண்டாம் என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement