பெரும் அதிர்ச்சி.. சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாய், மகள் திடீர் உயிரிழப்பு..

பெரும் அதிர்ச்சி.. சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாய், மகள் திடீர் உயிரிழப்பு..


mother-and-daughter-dead-after-eating-chicken-gravy

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பரோட்டா கிரேவி சாப்பிட்ட பின்பு குளிர்பானம் குடித்த தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள தங்கப்ப நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கற்பகவல்லி (34). இந்த தம்பதிக்கு சண்முகபாண்டி (8) என்ற மகனும், தர்ஷினி (7) என்ற மகளும் உள்ளனர்.

கற்பகவல்லி நேற்று இரவு அருகில் இருந்த உணவகம் ஒன்றில் சிக்கன் கிரேவி வாங்கிவந்து, வீட்டில் இருந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டுள்ளார். உடனே வயிர் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி தாயும் மகளும் அறிந்தியுள்ளனர்.

Crime

இதனை அடுத்து தாய் மகள் இருவரும் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில். அனுமதித்துள்ளனர் இருவருக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அதற்குளாக தாய் மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த சம்பவமானது பெரும் பதற்றதை ஏற்படுத்தியுள்ளது.