காரை நிறுத்திவிட்டு கடைக்குதான் போனாரு.. திரும்பி வந்து பார்த்தா!!! காத்திருந்த அதிர்ச்சி.. மொத்தமும் அபேஸ்

காரை நிறுத்திவிட்டு கடைக்குதான் போனாரு.. திரும்பி வந்து பார்த்தா!!! காத்திருந்த அதிர்ச்சி.. மொத்தமும் அபேஸ்Money theft from parked car at Vilupuram

காருக்குள் வைக்கப்பட்டிருந்த இரண்டரை லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கிளிஞ்சி குப்பத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் விழுப்புரம் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே துணிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். இவர் நேற்று முன்தினம் இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை ஒருபையில் வைத்துக்கொண்டு தனக்கு சொந்தமான காரில் கடலூரில் இருந்து விழுப்புரத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மாலை 5 மணியளவில் காரை துணிக்கடைக்கு அருகில் நிறுத்திவிட்டு காருக்குள் இருந்த பணத்தை எடுக்காமல் கடைக்கு சென்றுள்ளார் ராஜேஷ். பின்னர் இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் காரை எடுக்க வந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு காருக்குள் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ராஜேஷ் அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிரா கட்சிகளின் உதவியுடன் போலீசார் திருடனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...