பேரன் பேத்தி எடுத்த வயதில் தாய்க்கு கள்ளக்காதல்! கண்டித்த மகளை வீட்டிற்குள்ளே கொன்று புதைத்த தாய்!

பேரன் பேத்தி எடுத்த வயதில் தாய்க்கு கள்ளக்காதல்! கண்டித்த மகளை வீட்டிற்குள்ளே கொன்று புதைத்த தாய்!


mom killed her daughter for illegal affairs

திருப்பூரின் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் எஸ்தர் பேபி, இவர் கடந்த 2014ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 4 குழந்தைகளோடு அவரது தாய் சகாயராணி வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில், பாக்யராஜ் என்பவருடன் சகாயராணிக்கு தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சகாயராணியின் தவறான பழக்கம் அவரது மகள் எஸ்தருக்கு தெரிந்துள்ளது. இதனையடுத்து எஸ்தர் அவரது தாயை கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் திடீரென தனது மகள் மாயமாகிவிட்டால் என சகாயராணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக காணாமல் போனதாக கூறப்பட்ட எஸ்தரை போலீசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்தநிலையில் தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொலை குற்ற வழக்கு ஒன்றில் சேவியர் அருண் என்பவர் கைதானார். இவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக எஸ்தரின் தந்தைப்புகாரளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் சேவியர் அருணிடம் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

illegal affair

6 வருடத்திற்கு முன்பு கணவனை பிரிந்து குழந்தைகளோடு வீட்டிற்கு வந்த மகள் எஸ்தர் தனது தாய் பாக்கியராஜுடன் பழகுவதை கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனது கள்ளக்காதல் பற்றி மகள் யாரிடமாவது கூறிவிடுவாள் என நினைத்து, தனது மகளை கொலை செய்ய முடிவு செய்தார் சகாயராணி.

அதன்படி, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் சேவியர் அருண் மற்றும் பாக்கியராஜ் ஆகியோருடன் சேர்ந்து மகள் எஸ்தரை கத்தியால் குத்திக் கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, தன் மகளை காணவில்லை என காவல்துறையிலும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து எஸ்தர் கொலை வழக்கு தொடர்பாக சேவியர் அருண், சகாயராணி, பாக்கியராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். தனது தகாத உறவிற்காக பெற்ற மகளையே தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.