தமிழகம்

அம்மாவும், மகளும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை! போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

mom and daughter suicide

சென்னை கீழ்கட்டளை பகுதியில் வசித்து வருபவர் பிரபாவதி. கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தன் கணவனை இழந்த பிரபாவதி, 9ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் சொப்னாவுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அதேபகுதியில் வசித்துவந்த அவரது தந்தை செல்வராஜ், கணவரை இழந்த மகள் பிரபாவதிக்கும், அவரது பேத்தி சொப்னாவுக்கும் ஆறுதலாக இருந்துவந்துள்ளார். மேலும் ,மகளின் குடும்பச் செலவுக்கு செல்வராஜ் பணம் கொடுத்து உதவி செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி காலை மகளையும் பேத்தியையும் சந்தித்துவிட்டு சென்றுள்ளார். அடுத்தநாள் 29-ம் தேதி காலை 8 மணியளவில் மகளையும் பேத்தியையும் பார்க்க சென்றுள்ளார், வீட்டின் கதவு உட்பக்கம் பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை நீண்டநேரம் தட்டியும் திறக்காததால், மகள் மற்றும் பேத்தி தூங்கி கொண்டிருப்பார்கள் என நினைத்து செல்வராஜ் திரும்பிச் சென்றுவிட்டார்.

அதன்பின் மாலை 4 மணியளவில் இளைய மகள் கவிதாவுடன் செல்வராஜ் மூத்தமகள் பிரபாவதி வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அப்போதும் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்தபோது தனது மகள் மற்றும் பேத்தி ஒரே சேலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வராஜ் கதறி அழுதுள்ளார். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து தாய், மகள் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கணவர் இழந்த துக்கத்திலிருந்து மீளமுடியாத பிரபாவதி, அவள் மகளுடன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் ,வயதான காலத்தில் தந்தையை கஷ்டப்படுத்த விரும்பாத பிரபாவதி மகளுடன் இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.


Advertisement