சுனிதாவின் வருகைக்காக உதவிய அனைவர்க்கும் நன்றி - தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை.!



MK Stalin Thanks to Elon Musk and Nasa for Sunita Williams Return 

 

சர்வதேச விண்வெளி மையத்துக்கு, நாசாவின் விண்வெளி வீரர்கள் கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக சென்றிருந்தனர். இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உட்பட 4 அதிகாரிகள் குழு 8 நாட்கள் வேலைக்காக சர்வதேச விண்வெளி மையம் சென்றது. பின் அவர்கள் மீண்டும் வருவதில் தாமதம் நீடித்தது.

இதனால் அவர்களை மீட்டு வர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டி, அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மீட்கப்பட்டனர். 8 நாட்கள் பயணத்துக்கு சென்றவர்கள், 275 நாட்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், விண்வெளி வீரர்கள் குழு பூமிக்கு பத்திரமாக வந்தது.

இதையும் படிங்க: #Breaking: உச்சகட்ட கொந்தளிப்பில் இபிஎஸ் - பாத்துக்கலாம்.. முக ஸ்டாலினுக்கு சவால்.!

இந்த விஷயம் உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. அவர்கள் பத்திரமாக வர வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்துகொண்டனர். குறிப்பாக இந்திய வம்சாவளி வீரர் சுனிதாவுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பிரார்தித்தது. இன்று அவர்கள் பத்திரமாக பூமி வந்ததைத்தொடர்ந்து, பலரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பூமிக்கு பத்திரமாக திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உட்பட விண்வெளி குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், அவர்களை மீட்டு வர உதவிய அனைவர்க்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

இதையும் படிங்க: பிச்சைக்கார மாநிலமா? இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து - மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் கர்ஜனை.!