முதன்முறையாக மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் ஆலோசனை.! மு.க ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா.?

முதன்முறையாக மு.க ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் ஆலோசனை.! மு.க ஸ்டாலின் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா.?



mk-stalin-meeting-widh-modi

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

தமிழகம் உள்ளிட்ட 9 மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொளி காட்சியில் நடந்த இந்த கூட்டத்தில், தமிழகம் சார்பில், முதல்வர் ஸ்டாலின், சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்,சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை உயர்த்தவேண்டும் என முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். மேலும் ரெம்டெசிவிர் மருந்து குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார். பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனையில் முதன்முறையாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்றார்.