தமிழகம்

இனி ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.! வீடு தேடி வரும் கேஸ் சிலிண்டர்.!

Summary:

செல்போனில் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்யும் புதிய வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் எங்கிருந்து வேண்டுமானாலும் இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்க்ள் 8454955555 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்யலாம். இதன் மூலம் சிலிண்டர் பதிவு செய்வதற்கான அழைப்புகளுக்காக வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும் புதிய இணைப்பு பெறுவதற்கும் இந்த எண்ணில் மிஸ்டு கால் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இச்சேவையை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்கள்  மிக எளிதில் சமையல் எரிவாயு உருளையை பெறுவதற்கு இந்தமுறை எளிதாக உதவும் எனத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு பயனளிக்கும் இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போனில் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து சமையல் எரிவாயு உருளைக்கு பதிவு செய்யும் புதிய வசதியை இண்டேன் நிறுவனம் அறிமுகப்படுத்தியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Advertisement--!>