மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!



minister vijayabaskar talk about dengue fever


தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சமீபத்தில் திமுக தலைவர்  முக.ஸ்டாலின் பேசுகையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக சுகாதாரத்துறை மெத்தனமாக செயல்படுகிறது என தெரிவித்தார்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அதிமுக அரசு முழுமையாக தீவிரம் காட்டுவதில்லை. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்குவை ஒழிக்க தீவிரம் காட்டவில்லை என குற்றம் சாட்டினார். இதனையடுத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுவரை 3 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

                                           Dengue fever

காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் சென்று முழுமையான ஆலோசனைக்குப் பின்னரே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை முழுமையாக பின்பற்ற வேண்டும். 

டெங்கு காய்ச்சல் குணப்படுத்த கூடிய நோய் தான். எனவே யாரும் பயம் கொள்ள வேண்டாம். இந்த மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கையும் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்த வதந்திகளை பரப்புவோர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.