#Breaking: 5 நாள் தான்; முகக்கவசம் அணியுங்கள்., வைரஸை கண்டு பயம் வேண்டாம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்.!
சீனாவில் பருவகாலத்தில் பரவி வரும் எச்எம்பிவி வைரஸ், மலேஷியா மற்றும் இந்தியாவில் பரவி இருக்கிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மேற்குவங்கம் ஆகிய மாநிலத்தில் தலா 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் 45 வயதுடைய நபருக்கும், சேலத்தில் 69 வயதுடைய நபருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பதற்றம் வேண்டாம்
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தற்போது வரை உலக சுகாதார நிறுவனம் எச்எம்பிவி வைரஸ் தொடர்பாக அறிவுறுத்தல் வெளியிடவில்லை. அதேபோல, மத்திய அரசும் நேற்று மாலை வரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நேற்று மாலை நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில், வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம். தடுப்பு நடவடிக்கையை செயல்படுத்துங்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் உறுதி செய்யப்பட்ட எச்எம்பிவி வைரஸ்; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அரசுக்கு கோரிக்கை.!
முகக்கவசம் அணியுங்கள்
வைரஸ் பாதிப்பு உறுதியானால் சளி, இருமல், காய்ச்சல் இருக்கும். உடல்நலம் குன்றியோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் என்பதால், கவனமாக செயல்பட வேண்டும். இது ஏற்கனவே கண்டறியப்பட்ட வைரஸ் என்பதால், முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்துங்கள் என தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு அச்சம் வேண்டாம்
தமிழ்நாட்டில் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் வகையில் இருக்கிறது. பன்னாட்டு விமான நிலையத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே வைரஸ் நோயுடன் போராடித்தான் உலகம் வாழும் என தெரிவித்தது. தற்போதைய எச்எம்பிவி தொடர்பாக மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
5 நாட்களில் சரியாகிவிடும்
இருமல், தும்மல் போன்றவை வழக்கத்தை விட அதிகம் இருந்தால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது நல்லது. இது தீவிரமடைந்தால் மட்டுமே நுரையீரல் பாதிப்பு ஏற்படும். தனிமையில் இருந்து சிகிச்சை எடுத்துக்கொண்டாலே நோய் சரியாகிவிடும். 50 ஆண்டுகளாக இந்த வைரஸ் பாதிப்பு இருக்கிறது. இந்த நோய் 5 நாட்களில் சரியாகிவிடும். இது வீரியம் குறைந்த வைரஸ். நோய்பாதிப்பு உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் சென்று வாருங்கள்.
இதையும் படிங்க: இராமநாதபுரம்: முதலுதவி கிடைக்காமல் மருத்துவமனை வாசலில் பறிபோன உயிர்.. குடும்பத்தினர் கண்ணீர் கதறல்.!