உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா! மருத்துவமனையில் அனுமதி!



minister kp anbalagan affected by corona

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 52,334 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்திலே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். 

kp anbalagan

இந்தநிலையில், அமைச்சா் கே.பி.அன்பழகனுக்கு கடந்த புதன்கிழமை உடல் நலக் குறைவு ஏற்பட்டு அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதனையடுத்து, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதே மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி, அவருடைய மனைவி, மகள் மற்றும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.