த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததால் வழக்கு.! முன் ஜாமீன் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு மனு.!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து தமிழகத்தில் தற்போது அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தி.மு.க கூட்டணியில் சி.பி.எம் கட்சி சார்பில் சீனிவாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் உள்ளனன. இதனால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி விஐபி தொகுதியாக மாறியுள்ளது.
இந்தநிலையில், கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி விலக்கு அருகே அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ய முயன்ற போது, அவர்களை பணிசெய்ய விடாமல் அமைச்சர் தடுத்ததாகத் தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகார் அளித்துள்ளார் காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன் மீது அவதூறு பரப்பும் நோக்கிலும், அரசியல் உள்நோக்கத்துடனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமீன் வழங்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.