இருசக்கர வாகனத்தின் மீது மினிபேருந்து மோதி கோரவிபத்து... 2 பேர் பரிதாப பலி..! ஓட்டுநரை கைது செய்த போலீசார்..!

இருசக்கர வாகனத்தின் மீது மினிபேருந்து மோதி கோரவிபத்து... 2 பேர் பரிதாப பலி..! ஓட்டுநரை கைது செய்த போலீசார்..!


minibus crash the bike near chennai

இருசக்கர வாகனத்தின் மீது மினிபேருந்து மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை செம்மஞ்சேரியில் இருந்து சோழிங்கநல்லூரை நோக்கி இருவர் இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த மினிபேருந்து இருசக்கரவாகனத்தின் மீது மோதியதில், ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய மற்றொரு இளைஞரை மருத்துவ ஊர்தியின் மூலமாக அருகிலிருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின் இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினருக்கு தெரியவரவே உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

chennai

இதனையடுத்து விசாரணை நடத்தியதில் இருவரும் நாவலூரில் இருந்து துரைப்பாக்கம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தபோது விபத்தில் சிக்கியதாகவும், அவர்களது பெயர் ரூபேஷ் (வயது 27) மற்றும் அபிஷேக் சிங் (வயது 30) என்பதும் தெரியவந்தது. அத்துடன் விபத்து ஏற்படுத்தியதற்காக மினிபேருந்தை கைப்பற்றியதுடன் ஓட்டுநரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.