"கஜா புயல் எதிரொலி; ஒரு டிப்பர் வைக்கோல் எவ்வளவு தெரியுமா!" விழிபிதுங்கும் பால் உற்பத்தியாளர்கள்

"கஜா புயல் எதிரொலி; ஒரு டிப்பர் வைக்கோல் எவ்வளவு தெரியுமா!" விழிபிதுங்கும் பால் உற்பத்தியாளர்கள்


Milk producers worry about rate increase of vaikol

கடந்த ஆண்டு நவம்பர் 15, 16 ஆம் தேதிகளில தமிழக டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல சமூக அமைப்புகள் மற்றும் அரசு சார்பாக பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கின. ஆனால் அவை அனைத்தும் வெறும் தற்காலிக தீர்வுகள் மட்டுமே. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைத்த கஜா புயலின் உண்மையான பாதிப்புகள் இப்போது தான் தெரியவந்துள்ளது. 

farmers

எந்தவித ஆற்றுப் பாசனமும் இல்லாமல் நிலத்தடி நீரை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வருபவர்கள் தான் புதுக்கோட்டை மற்றும் தஞ்சையின் ஒரு பகுதி விவசாயிகள். கஜா புயலால் மின் கம்பங்கள் அனைத்தும் சாய்ந்து விழுந்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் காயந்து போகின. 

farmersஇதனால் நெல் உற்பத்தியும் மாடுகளுக்கு தேவையான வைக்கோலுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வரலாறு காணாத அளவிற்கு வைக்கோலின் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக 4 முதல் 5 ஆயிரம் வரை விற்பனையாகும் ஒரு டிப்பர் வைக்கோலின் விலை தற்போது 10 முதல் 12 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீரானது 500 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதையடுத்து பல சிறு விவசாயிகள் விவசாயம் செய்வதையே நிறுத்திவிட்டனர். பெரு விவசாயிகள் மட்டுமே 1000 அடிவரை ஆழ்துளாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். 

farmers

சிறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து கொண்டும் கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர். பசு மாடுகளை வளர்த்து பால் உற்பத்தி மூலம் கிடைப்பதே அவர்களுக்கு முதன்மை வருமானமாக இருந்து வருகிறது. ஆனால் பசு மாடுகளுக்கு அடிப்படை தேவையான வைக்கோலின் விலை திடீரென அதிகரித்திருப்பதால் அவர்கள் அனைவரும் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

farmers

விவசாயம் பொய்த்து போன நிலையில் இத்தனை நாட்களாக கைக்கொடுத்த வந்த பால் உற்பத்திக்கும் தற்பொழுது பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அடுத்து என்ன செயவதென்றே தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் சிறு விவசாயிகள்.