உருவாகிறது புயல்..!! அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

உருவாகிறது புயல்..!! அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!



Meteorological Department, rain is likely to occur in 23 districts of Tamil Nadu in the next 2 hours

தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில்  அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில்  இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு  உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும்  இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் உள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 6 ஆம் தேதி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக அப்பகுதிகளில் 7 ஆம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்  என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.