நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி.! முதல்நாளே களை கட்டிய மெரினா.!

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி.! முதல்நாளே களை கட்டிய மெரினா.!



merina-open-afgter-long-days

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரைகள், இன்று திங்கள்கிழமை முதல் திறக்கப்படுகின்றன. கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வோர், உடற்பயிற்சி செய்வோர் மெரினா கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் மெரினா வெறிச்சோடி காணப்பட்டது.

merina

இதனையடுத்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, டிசம்பர் 14ம் தேதி முதல் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்தது. இதற்காக சென்னை மெரினா கடற்கரையை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து வைத்து இருந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே மெரினா  கடற்கரை மக்கள் கூட்டம் களை கட்டத்தொடங்கியது. மெரினா கடற்கரைக்கு காலையிலேயே ஏராளமான பேர் வரத்தொடங்கினர். இன்று அதிகாலையில் இளைஞர்கள், இளம் பெண்கள் என பலர் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.  கடற்கரைக்கு வருபவர்கள் மாஸ்க் அணிதல், தனி மனித இடைவெளி உள்ளிட்ட விதிகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.