தமிழகம்

ஊரடங்கில் பயங்கரம்! டிவி பார்த்ததால் தந்தையால், மகளுக்கு துடிதுடிக்க நேர்ந்த விபரீதம்!

Summary:

mentaly-affected-father-killed-daughter-in-aathur

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்  பகுதியில் வசித்து வந்தவர் அந்தோணி. இவரது மனைவி எபிசா. இவரது மூத்த மகள் அந்தோணிஸ்டா. 17 வயது நிறைந்த இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தார். அந்தோணிக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும்  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட  நிலையில் அவருக்கு குணமாகவில்லை.

அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் புளியம்பட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து அவரை பராமரித்து வந்தனர். இதற்கிடையே, கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட  நிலையில், அந்தோணியை அவரது குடும்பத்தினர் ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்று, கவனித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்தோணி வீட்டில் யாராவது சத்தமாக பேசினாலோ அல்லது தெருக்களில் யாரேனும் சத்தமாக பேசினாலோ அவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது மகள்அந்தோணிஸ்டா வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த அந்தோணி அவரை கம்பால் கடுமையாக அடித்துள்ளார்.

மேலும் வலி தாங்கமுடியாமல் அவர் அலறி துடித்தவாறு வெளியே ஓடியபோதும் அந்தோணி அவரை துரத்திசென்று சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அந்தோணிஸ்டா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்துள்ளார். பின்னர் அவரது தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணியை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement