சைக்கிளில் சென்றவருக்கு வழியில் நடந்த பயங்கரம்... நொடியில் உயிரிழந்த சோகம்... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

சைக்கிளில் சென்றவருக்கு வழியில் நடந்த பயங்கரம்... நொடியில் உயிரிழந்த சோகம்... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!


men-dead-by-bike-accident-in-tripur

சைக்கிளில் சென்ற ஒருவரின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் குடிநீர் பணி விநியோகிக்கும் வாட்டர்மேன் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தனது பணியை முடித்துவிட்டு தாராபுரம் சாலை வழியாக சுப்பிரமணியன் வீடு திரும்பிய போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த ஒருவர் சுப்பிரமணி மீது மோதியுள்ளார்.tripurஇந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சுப்பிரமணியன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விபத்து எவ்வாறு நடந்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.