ஐயா.. இதையெல்லாம் கேட்கமாட்டீங்களா!! பிரதமர் மோடிக்கே வீடியோ அனுப்பிய மீரா மிதுன்!! என்ன கூறியுள்ளார் பாருங்க..

ஐயா.. இதையெல்லாம் கேட்கமாட்டீங்களா!! பிரதமர் மோடிக்கே வீடியோ அனுப்பிய மீரா மிதுன்!! என்ன கூறியுள்ளார் பாருங்க..


Meera mithun video to PM modi viral video

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ள 
நிலையில், தமிழ்நாட்டில் என்னை போன்ற புத்திசாலி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி நடிகை மீரா மிதுன் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
 
அழகி போட்டி, தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில், பிக்பாஸ் இப்படி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை மீரா மிதுன். இவர்  திரையில் தோன்றி பிரபலமானதைவிட, பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி பிரபலமானதுதான் அதிகம். குறிப்பாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களான விஜய், சூர்யா போன்றறையும், அவர்களது மனைவி குறித்தும் நடிகை மீரா மிதுன் தரக்குறைவாக பேசி வீடியோக்கள் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தமிழ் திரையுலகின் இயக்குனர்களை சாதிய ரீதியாக திட்டி பேசி புதிய சர்ச்சையில் சிக்கினார் மீரா மிதுன். சில பிரபல இயக்குநர்கள், தனது படத்தை மார்பிங் செய்து படங்களில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகளை கூறினார். அதுமட்டும் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு, அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்கள் அனைவரும் கிரிமினல்கள் என்றும் காட்டமாகப்பேசியிருந்தார்.

தொடர்ந்து சமூகத்தின் பெயரை குறித்தே பேசிய அவர், அந்த சமூகத்தை சார்ந்த அனைத்து திரைப்பட இயக்குநர்களும் திரை துறையை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவரும் மீராமிதுன் மீது நடவடிக்கை எடுக்க கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து நடிகை மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தநிலையில், தற்போது வழக்குத் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு,  மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கிலத்தில் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் அவர் கூறிருப்பதாவது, "இந்தியாவில் ஒவொவ்ரு நொடியும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. குறிப்பாக தமிழக பெண்கள் அதிகமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பொய்யான தகவல்களை பரப்பி எனது பெயரை கெடுக்கும் வேலையை சிலர் கடந்த 5 ஆண்டுகளாக செய்துவருகின்றனர்.

தமிழ் சினிமாவானது ஒரு விபசார கூட்டமாக செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள சட்டங்களை கடுமையாக்கி நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் மீரா மிதுன். மேலும், நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த அனைவரும் தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்த சில நபர்களைத்தான் நான் விமர்சனம் செய்தேன்.

நீதிமன்ற வழக்குகளை சந்திப்பதற்கு எல்லாம் எனக்கு நேரம் இல்லை.. ஏனென்றால், நான் அவ்வளவு பிஸியாக இருக்கிறேன் எனவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். என்னை கைதுசெய்யவேண்டும் என்றால் தாராளமாக கைதுசெய்யுங்கள். காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? தமிழ்நாட்டில் என்னை போன்ற புத்திசாலி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார் மீரா மிதுன்..