தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
காதல் திருமணம் செய்த 4 வருடத்தில், கடன்கார காதல் கணவனால் 2 குழந்தையை கொன்று பெண் தற்கொலை.!
எனது கணவருக்கு கடன் வாங்கி, கடன் கொடுக்கத்தான் தெரிகிறது. அப்பா, அம்மாவை விட்டு வந்து தவறு செய்துவிட்டேன். அதனால் இம்முடிவை எடுக்கிறேன் என காதல் திருமணம் செய்த பெண் குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த பரிதாபம் நடந்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, மேலநாங்கூர் கன்னிக்கோவில் தெருவில் வசித்து வருபவர் குப்புசாமி. இவரின் மகன் கார்த்திக் (வயது 27). இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவில் கண்டைனர் லாரி ஓட்டுநராக பணியாற்றுகிறார். சீர்காழி தென்னலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரின் மகள் பி.எஸ்.சி பட்டதாரி பாரதி (வயது 21). இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கடந்த 4 மாதத்திற்கு முன்னதாக மினி பேருந்தில் கார்த்திக் ஓட்டுநராக பணியாற்றும் போது இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், தம்பதிகளுக்கு கவுசிக் (வயது 3), பவதராணி (வயது 1) என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 3 மாதமாக சீர்காழி தென்பாதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
சென்னை மற்றும் புனே என கார்த்திக் ஓட்டுநர் வேலைக்கு சென்றுவிடுவதால் பாரதி குழந்தையோடு தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கார்த்திக் அதிகளவில் கடன் வாங்கி கஷ்டப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடபிராக தம்பதியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பாரதி மன உளைச்சலோடு இருந்து வந்த நிலையில், நேற்று தனது தாயார் சித்ராவுக்கு தொடர்பு கொண்டு பாரதி பேசியுள்ளார்.
அப்போது, நானும், குழந்தைகளும் தற்கொலை செய்யப்போகிறோம் என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து இருக்கிறார். பதறிப்போன சித்ரா பாரதியின் வீட்டிற்கு சென்று பார்க்கையில் கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், குழந்தைகளும் தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பாரதி தனது குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து, குழந்தைகள் மயங்கியதும் தூக்கிட்டு கொலை செய்து, தானும் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பாக பாரதியின் கணவர் கார்த்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தில் இருக்கும் அவர் சொந்த ஊருக்கு வந்துகொண்டு இருக்கிறார். பாரதி எழுதி வைத்த கடிதம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட நிலையில், அந்த கடிதத்தில், "எங்களின் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. அப்பா, அம்மாவை விட்டு வந்தது பெரிய தவறு. காதல் திருமணம் செய்தது தவறு.
எனது கணவருக்கு கடன் வாங்கி, கடன் கொடுக்கத்தான் தெரிகிறது. எங்களுக்கு இடம் வாங்கி, வீடு கட்ட தெரியவில்லை. எனது எதிர்காலம் கணவரின் செயல்பட்டால் கேள்விக்குறியாகிறது. அதனால் கேள்விக்குறியாகும் எதிர்காலத்தை எதிர்கொள்ளும் தைரியம் என்னிடம் இல்லை. அதனால் நான் எனது குழந்தைகளுடன் இம்முடிவை எடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.