மதுபானம் குடித்தவர் மர்ம மரணம்; சீர்காழியில் நடந்த சோகம்.!Mayiladuthurai Seerkazhi Liquor Drinking Man Died 

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, வருஷபத்து கிராமத்தில் வசித்து வருபவர் கணேஷ். மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்ட கணேஷ், கடந்த மே 19ம் தேதி அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்கி குதித்துள்ளார். 

மதுபானம் அருந்தியதும் மயக்கம்

இவருடன் மைத்துனர் மணிகண்டன் என்பவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனிடையே, இவர்கள் இருவரும் ஒருவர்பின் ஒருவராக மயங்கி இருக்கின்றனர். இதனையடுத்து, இவர்களை பதறியபடி மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். 

இதையும் படிங்க: "முத்திய பழங்கள் சாராயத்திற்கு ஏங்க, முத்தான பழங்கள் விற்கும் முந்திரி" - நெகிழவைக்கும் நிகழ்வு.!

ஒருவர் பலி, மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 நாட்களாக உயிருக்கு போராடி வந்த கணேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். மணிகண்டன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சீர்காழி காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்த கணவனுக்கு மகளை கொன்று துக்க செய்தி அனுப்பிய தாய்; கள்ளகாதலால் சோகம்.!