தமிழகம்

கஜா புயலால் பாதித்த மக்களுக்காக திருமண தம்பதிகள் செய்த நெகிழவைக்கும் செயல்!.

Summary:

marriage couples helped to Gaja affected peoples


கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில் தினேஷ்குமாா், திவ்யா என்ற தம்பதியினா், தங்களுடைய திருமணத்திற்கு வருபவர்களிடம் கஜா புயலுக்கு நிவாரண நிதி வாங்குவதாக முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து தங்களுடைய நண்பர்களின் உதவியுடன் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவருக்கும் மனதார சோறுபோட்டு, அவர்களிடம் புயலால் பாதித்த டெல்டா மாவட்ட   மக்களுக்காக நிதி வாங்கியுள்ளனர். 

உறவினர்கள் அனைவரும் அவர்களை மனமார வாழ்த்தி, புயலால் பாதித்த மக்களுக்காக நிதியுதவியும் அளித்துள்ளனர். புயலால் பாதித்த மக்களுக்கு உதவிய திருமண தம்பதிகளை அனைவரும் பாராட்டிவருகின்றனர்.


Advertisement